பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

எனது குறுங்கவிதைகள் இங்கே.......................நட்புக் கவிதைகள்

ஒட்டமுடியாத துருவங்களாய்
ஒட்டிக்கொண்டு வாழ்வாயா?

காதல் என்கிறாய்!
என் விழியைத் திருடி,
நட்பு என்றாய்,
மொழியை வருடி,

அதரத்தின் பாஷைகள்
அறியாமல் போனதினால்
அறியாமல்
ஆழத்தோண்டுகிறாய்
அன்புக் கிணறு.
அன்பு நண்பனே!
அகழி என்று வெட்டுவது சரிதான்
அது நீர்க்குமிழிதான்...
அன்றி, வெட்டுவது நிறுத்து.
அன்பை நட்பாலே பொருத்து...


--------------------

வெகுதொலைவில் எங்கோ
சென்றுகொண்டிருக்கும்
எந்தன் பூவின் வாசனை நுகர்ந்து
என் காதருகே சொல்கிறாய்
"போய் வருகிறேன் தோழி!!!"

கவிதை எழுதத்தெரியாது என்று
கவிஞனின் பொய்யாய் பொய்கிறாய்
ஒரு வரியில் சொன்னது என்னவாம்?


----------------------------


கொய்தது பிச்சி @ 6:52 AM,

1 பின்னூட்டங்கள்:

At April 8, 2009 at 8:46 AM, Blogger akshay சொன்னது...

ungal kavithai
pookum pookalin
pulambalukku
uruvagam

aekkam
varigalil
azhagiya
unarvagam

vaazhthukkal :)..

 

Post a Comment

<< இல்லம்