பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

எனது குறுங்கவிதைகள் இங்கே.......................நட்புக் குறுங்கவிதை

விழி ரேகைகளின்
மெல்லிய இடைவெளியில்
நம் இமைகளின் படபடப்பில்
வீழ்ந்து தவிக்கிறது
நட்பு

----------------------

கருவிழி வளையங்களின்
பார்வைக் கணைகளைத்
தாங்கித் தாங்கியே ஆனாலும்
நெஞ்சு நிமிர்ந்து
நடக்கிறது
என் காதலை மீறிய நட்பு.

---------------------

நெருக்கமான ரேகைகளைப் போல்
பிணைப்பே
உண்மையான நட்பு

----------------

மிஞ்சத் தூண்டுதா நட்பு?
கெஞ்சத் தோன்றுதா நட்பு?
வஞ்சத்தை எறியுமே நட்பு
நெஞ்சத் தகநக நட்பு

---------------------

ஏதாவது ஒரு மரத்தின்
நுனிக் கிளையில் அமர்ந்து கொண்டு
முல்லைக் கதைகள் பேசி,
கைகோர்த்து, இலைகளை உதிர்த்து
பூக்களை சபித்து,
பிழை கருதி நெருக்கமின்றி
மரப்பட்டைகளை உரித்தவாறு
கணைகளை நீக்கி
என் விழிகளின் வழி
என் உள்ளம் சென்று
காணுவாய்!

உன் உயிர் அங்கே தூங்கிக் கொண்டிருக்கும்
மீண்டும் வந்துவிட்டு என்னோடு பேசுவாய்
கை கோர்ப்பாய்!
உள்ளத்தில் என்றென்றும் உன்னை
தூக்கத்திலேயே வைத்திருக்கிறேன்,,, நண்பா!
விழித்துவிட்டால் இதயத்தை நோண்டுவாய் என்று!!!கொய்தது பிச்சி @ 6:39 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்