பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

எனது குறுங்கவிதைகள் இங்கே.......................நட்புக் கவிதை

அதிரவைக்கும் பூப் பிரசவத்திற்கும்
அழகுபடுத்தும் வண்டொலிக்கும்
இடையில்
இழைந்தோடுமே
நட்பு

----------------------

மகிழம்பூ வாசனை நெடியில்
தேன் கலந்த
இனிமையான துகள்களின்
ருசியே உனக்கும் எனக்கும்
உண்டான நட்பு

------------------

விழுதினைப் போல
விழுகாது இருக்கும்
விருப்பமான நட்பு.

------------------

பருக்கையின்
பிளவுக்குள்ளே
பொத்தி வைக்கப்பட்டிருக்கும்
அரூப அன்பே
காரணமில்லா நட்பு


--------------

ஒரு கை மண்ணின்
எண்ணிலடங்கா துகள்களில்
ஒளிந்திருக்கும் காந்தமே
உலகத்தில்
உலாவும்
உன்னதமான நட்பு


--------------

தென்னங்காயைப் போல்
இளமையாயும்
தேங்காயைப் போல்
வலிமையாயும்
இளநீரைப் போல்
இனிமையாயும்
இருப்பதுவே
நட்பு


----------

தெள்ளிய நீரினில்
பாறாங் கல்லைப் போட்டாலும்
கலங்காமல் இருக்கும்
உண்மையான நட்பு


கொய்தது பிச்சி @ 9:15 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்